ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (பிப்.7) நிறைவு பெறும் நிலையில், அதிமுகவில் நீடித்து வந்த வேட்பாளர் விவகாரம் முடிவுக்கு வந்து, ஈபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு அதிமுகவின் இறுதி வேட்பாளராவது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை இடைத்தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட மணல் மேடு பகுதியில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்ட கே.எஸ்.தென்னரசு, தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.ஏ.செங்கோட்டையன், “எடப்பாடி தலைமையில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் கோயில் வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டுள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவது ஆகும்.