தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் விவகாரம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மாநில ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

sc youths assaulted at erode: பட்டியலின இளைஞர்கள் இருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் பெ.ர.சிவகுமார் இளைஞர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மாநில ஆணைய தலைவர் நேரில் விசாரணை
வெங்கமேட்டில் தாக்கப்பட்ட பட்டியலின இளைஞர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 8:22 PM IST

வெங்கமேட்டில் தாக்கப்பட்ட பட்டியலின இளைஞர்கள்

ஈரோடு:கடந்த 21 ஆம் தேதி கோழி திருடியதாக இரண்டு பட்டியலின இளைஞர்களை ஊர் மக்கள் சாதி பெயரை சொல்லியும், அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் பெ.ர.சிவகுமார் விசாரணை நடத்தினார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள கிராமத்து வீடுகளில் வளர்த்து வந்த கோழிகளை திருடி சென்றதாக கடந்த 21 ஆம் தேதி பட்டியலினத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை ஊர் பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின் அவர்கள் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது திருட்டில் ஈடுபட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கோழி திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சிலர் சிறுநீர் கழித்தும் சாதி பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசியதாகவும் கடந்த 24ஆம் தேதி 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை அறிந்த கிராம மக்கள், தங்கள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கடந்த 25ஆம் தேதி கோபி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டங்கள் அறிவித்த நிலையில் கடந்த 28ஆம் தேதி கோபி கோட்டாசியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் பிரியதர்ஷினி முன்னிலையில் தனித்தனியாக இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து கடந்த 29 ம் தேதி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உள்ளிட்டோர் கோபி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த இளைஞர்களை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்,சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பெ.ர.சிவகுமார், துணைத் தலைவர் புனிதா பாண்டியன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் இளஞ்செழியன், ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் இன்று நேரில் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் ராஜகோபால சுன்கரா மற்றும் மாட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: சென்னை, திருவள்ளூரில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details