தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடிவேரி அணையில் குவிந்த மக்கள் பட்டாளம்; வரலாறு காணாத கூட்டம்! - வரலாறு காணாத கூட்டம்

வாட்டி எடுக்கும் கோடைகாலத்தின் சூட்டைத் தணிக்க, கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் உற்சாகமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 23, 2023, 8:01 PM IST

ஈரோடு கொடிவேரி அணைக்கு ஒரே நாளில் 10000 பேர் வந்ததாக பொதுப்பணித்துறை தகவல்

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தளங்களில் கொடிவேரி அணையும் ஒன்று.

பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர், இந்த கொடிவேரி அணையில் அருவியைப் போல ஆர்ப்பரிக்கிறது. ரம்மியமாக கொட்டும் இந்த நீரில் குளிப்பதற்காக, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் வந்து செல்கின்றனர். இதனால், விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர் நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (ஏப்.23) விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனால், வழக்கத்தை விட அணையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையும் படிங்க:திருவண்ணாமலையில் பாரம்பரிய உணவுத் திருவிழா - ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்!

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் வந்திருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக, கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

இந்நிலையில், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என்று எச்சரித்தனர். மேலும், குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவுகளையும், அங்கு விற்ற மீன் வகைகளையும் சுவைத்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையின் காரணமாக, இன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாதவகையில் 10 ஆயிரம் பேர் அணைக்கு வந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொடிவேரி அணையில் விற்ற ருசியான மீன்கள்

இதையும் படிங்க:நில ஒருங்கிணைப்புச் சிறப்பு சட்டத்தைத் திரும்பப் பெறுக - பூவுலகின் நண்பர்கள் குழு கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details