ஈரோடு அருகேயுள்ள மரப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் ஈரோட்டிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கொடுமுடி அருகேயுள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக தனது இரண்டு சக்கர வாகனத்தில் விக்னேஸ்வரன், அவரது மனைவி துர்கா, அவரது சகோதரி ஸ்ருதி ஆகியோரில் சென்றுள்ளனர். கோயிலில் வழிபாட்டை முடித்துவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் ஈரோடு திரும்பும்போது கொடுமுடி அருகேயுள்ள மலையம்பாளையம் பகுதியில் எதிரில் வேகமாக வந்த சரக்கு வாகனம் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சாலை விபத்து இளைஞர் உயிரிழப்பு: இரண்டு பெண்கள் படுகாயம் - erode accident
ஈரோடு: கொடுமுடி அருகே கணவன், மனைவி உள்பட மூன்று பேர் பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் இரண்டு பெண்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் இரண்டு பெண்களும் மயங்கி விழுந்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் படுகாயமடைந்த பெண்களை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த விக்னேஸ்வரனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த துர்கா மற்றும் ஸ்ருதி இருவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மலையம்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.