ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில், உறவினர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக சத்தியமங்கம் கடம்பூர் மலைப்பகுதி கரளையம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி, அவரது மனைவி மாதேவம்மாள், மகன் சந்தோஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
பர்கூர் முதலாவது வளைவில் திரும்பும் போது, எதிரே வந்த டிப்பர் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி மாதேவம்மாள் இடதுகாலில் முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார், மகன் சந்தேஷ் மட்டும் காயமின்றி உயிர்தப்பினர்.
இந்த விபத்து நடத்த சில நிமிடங்களில், அவ்வழியாக 20க்கும் மேற்பட்டோர் இருந்தபோதும் கூட உயிருக்கு போராடிய மாதேவம்மாளை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் விபத்து குறித்து பேசிக்கொண்டிருப்பதும் செல்போனில் படம் எடுப்பதுமாக வீடியோ வெளியாகியுள்ளது.