ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது சிறுத்தை, புலி, புள்ளிமான்கள், காட்டெருமை ,செந்நாய் போன்ற வனவிலங்குகளின் புகலிமாடக உள்ளது. இயற்கையை ஒன்றி வாழும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுத்தை, புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஜீரஹள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்ததை அக்கிராமமக்கள் பார்த்தனர். அப்போது இளைஞர்கள் ஹாயாக இளைப்பாறிய புலியை படம் பிடித்தபோது புலி அசராமல் படுத்திருந்தது. சிறிது நேரத்தில் அது காட்டுக்குள் சென்றது. இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வரைலாகி வருகிறது.