தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோபி அருகே கால்நடைகளை திருடிய சம்பவம்; "உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடுவோம்" - மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் - பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்

Erode Goat theft case: கோபிசெட்டிபாளையத்தில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் சிவக்குமார் தலைமையிலான ஆணையம் நேரில் வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மீது சாதிய வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இளைஞர்கள் மீது சாதிய வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 12:06 PM IST

மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அளித்த பேட்டி

ஈரோடு: பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்குப் பெட்டி இயந்திரக் கிடங்கில் இரவு நேர பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா நேற்று (நவ.29) சோதனை மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “ஈரோடு மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்படையக்கூடிய 137 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகாவிலும் கண்காணிப்பு பணிகளுக்காக துணை ஆட்சியர்கள் தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த இரண்டு மாதங்களில் பெய்த கனமழை காரணமாக 36 வீடுகள், 4 கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களின் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த அனைவருக்கும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மல்லி நகர் பகுதியில் உள்ள நீரோடையில் தற்காலிகமாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சீர் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டிற்குள் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:“நடிகை குஷ்பு அனாவசியமாக பேசுகிறார்”.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்!

தொடர்ந்து பேசிய அவர், "கோபிசெட்டிபாளையத்தில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தரப்பில் காவல் துறையினரிடம் விளக்கம் கேட்டதற்கு, அதற்கு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்படுள்ளது. காவல் துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாஜிஸ்திரேட் முன்னிலையில் இரு தரப்பு மக்களிடமும் விசாரணை நடைபெறும்" என்று கூறினார்.

இந்நிலையில், கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கோழி திருடியதாக கூறி ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்ட படுகாயம் அடைந்த பட்டியலின இளங்ஞர்களை மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் இந்த விவகாரம் குறித்து மாவட்ட துணை கணகாணிப்பாளரைச் சந்திக்க வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "ஆட்சி மாறுகிறதே தவிர, காட்சிகள் மாறவில்லை. குறிப்பாக தமிழகத்தில் தலித் மக்கள் தொடர்ந்து பல வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இளைஞர்களை அடித்துவிட்டு, திட்டமிட்டு பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக நான் நேரில் வந்தேன். திருட்டு வழக்கு பதியப்பட்டு இருந்தால் கூட, காவல்துறைக்கு அடிக்கின்ற அதிகாரம் கிடையாது, இது ஒரு மனித உரிமை மீறல். இந்த வழக்கை முறைப்படி அதிகாரிகள் விசாரிக்க வேண்டும், இந்த வழக்கை நீதிபதி சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் நேரில் வந்து விசாரணை செய்ய வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றத்தை நாடி முறைப்படி வழக்கைச் சந்திக்க உள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:கடம்பூரில் அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளக் கதிர்களை நாசப்படுத்திய யானைகள்.. விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details