தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2023, 10:16 PM IST

ETV Bharat / state

பெருந்துறை சிப்காட் கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதிய திட்டம்.. ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

contaminated water recycle for industries: பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ள நிலத்தில் உள்ள நீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளே பயன்படுத்த புதிய முயற்சியை செய்து வருகிறது ஈரோடு மாவட்ட நிர்வாகம்

கழிவு நீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளில் பயன்படுத்த புது முயற்சி
கழிவு நீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளில் பயன்படுத்த புதிய முயற்சி

கழிவு நீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளில் பயன்படுத்த புது முயற்சி

ஈரோடு:பெருந்துறை அருகே சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் ஈங்கூர், வரப்பாளையம் காசிப்பில்லாம் பாளையம், எழுதிங்கள் பட்டி, கூத்தம் பாளையம், பனியம்பள்ளி, செங்குளம், பெரிய வெட்டுவா பாளையம், சின்ன வெட்டுவா பாளையம், கடப்பமடை என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சிக்காக சிப்காட் வளாகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது.

இந்த சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் சாய தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், மாட்டுத்தீவன தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலை இரும்பு உருக்கு தொழிற்சாலை தோல் தொழிற்சாலை எரிவாயு உருளை தயாரிப்பு குளிர்பதனை கிடங்கு என 250 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

50க்கும் மேற்பட்ட சாய, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு பொதுமக்களும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த நீரை பயன்படுத்திய பொதுமக்கள் புற்று நோய், எலும்பு தேய்மானம், குழந்தை இன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகளும் குலமும் கழிவு நீரினால் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆலை நிர்வாகமே பூஜ்ஜியம் முறையில் மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த தொழிற்சாலை வளாகம் இருக்கக்கூடிய பகுதிகளில் ஏற்கனவே விவசாயிகள் அமைத்திருந்த ஆழ்துளை கிணறுகள் மூலமாக வெளியேற்றப்பட்ட கழிவுநீர் நிலத்தடியில் இன்னும் இருப்பதால் மழைக்காலங்களில் நிலத்தடி நீர் மூலமாக அந்த கழிவு நீர் அருகாமையில் இருக்கக்கூடிய கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின் படி பல்வேறு தொழிற்சாலையின் மூலமாக குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதை மற்றும் நிலத்தடியில் உள்ள கழிவு நீரை புதிய முயற்சியாக லாரிகள் மூலமாக மீண்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச்சென்று அங்கு அமைக்கபட்டுள்ள பூச்சியம் முறை சுத்திகரிப்பு இயந்திரம் மூலமாக மீண்டும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கே எடுத்துக்கொள்ளும் புதிய முயற்சியை தொடங்கி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த முயற்சி நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும். மேலும் இப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு செல்லும் நீர்வழி பாதையை கான்கிரீட் பாதையாக மாற்றி தடுப்பணை அமைத்து மழை காலத்தில் தண்ணீரை தேக்கி அதனை தொழிற்சாலைகள் அந்தந்த பகுதியில் சுத்திகரிப்பு செய்யவும், தொழிற்சாலைகளில் ஊழியர்கள் பயன்படுத்தும் தினசரி கழிவு நீர், கிராமத்தில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தி வெளியேற்றி வருகின்றனர்.

தினசரி கழிவு நீரை கிராமங்களில் சுத்திகரிப்பு செய்து அந்த நீரையும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கே எடுத்து கொள்ளவும், கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கைகள் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலமாக எடுத்தது வருவதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலை நிர்வாகம் பல லட்சம் செலவு செய்து எடுத்துள்ள புதிய முயற்சி பலன் அளிக்கும் என்பது பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:தேனியில் மாநாடு போல் நடந்த தங்க தமிழ்செல்வனின் மகள் திருமண விழா!

ABOUT THE AUTHOR

...view details