தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செக்போஸ்ட்டுக்கு திடீரென வந்த சிறுத்தை.. ஈரோடு அதிர்ச்சி சம்பவம்! - சிசிடிவி

பண்ணாரி சோதனைச்சாவடியில் நண்பகலில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறுத்தை சாலையை கடந்து செல்வதை பார்த்து அச்சமடைந்தனர்

பண்ணாரி சோதனைச்சாவடியில் சாலையை அனாயசமாக கடந்து செல்லும் சிறுத்தை
பண்ணாரி சோதனைச்சாவடியில் சாலையை அனாயசமாக கடந்து செல்லும் சிறுத்தை

By

Published : Dec 21, 2022, 2:15 PM IST

Updated : Dec 21, 2022, 2:59 PM IST

பண்ணாரி சோதனைச்சாவடியில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தில் சிறுத்தைகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக பண்ணாரி சாலையோரம் புள்ளிமான் கூட்டம் இருப்பதால் இரை தேடி சிறுத்தைகள் பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இங்கு காவல்துறை மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன.

இதில் 24 மணி நேரமும் போலீசார் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திங்கள்கிழமை நன்பகலில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறுத்தையை சாலையை கடந்து செல்வதை பார்த்து அச்சமடைந்தனர். சாலையை வேகமாக கடந்த சிறுத்தை காட்டுக்குள் சென்று மறைந்தது.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பகல் நேரத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் பண்ணாரி சோதனைச்சாவடி போலீசார் அச்சமடைந்துள்ளனர். அதேபோல வாகனவோட்டிகள் மத்தியிலும் பீதி கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க:பழங்குடியினர் பயன்பாட்டில் உள்ள நிலங்களை வனத்துறைக்கு வகை மாற்றம் செய்ய எதிர்ப்பு

Last Updated : Dec 21, 2022, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details