ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதி பாரதி நகரைச் சேர்ந்தவர் காளியம்மாள் (95). இவரது மகள் ஜெலின் மேரி. ஜெலின் மேரியின் மகன் பூவிழி செல்வன். பூவிழி செல்வன் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் மதுபோதைக்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று 12 மணியளவில் மது அருந்திவிட்டு தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது தாய் ஜெலின் மேரியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஜெலின் மேரி பணம் தர மறுத்ததால், ஆத்திரத்தில் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தனது பாட்டி காளியம்மாள் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி துடிதுடித்து பலியானார்.