தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது - A tip off to the police about gambling going on

ஈரோட்டில் செயல்படாத தனியார் நூற்பாலை வளாகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharatஈரோடு நூற்பாலையில் சூதாட்டம் ஆடிய 9 பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்
Etv Bharatஈரோடு நூற்பாலையில் சூதாட்டம் ஆடிய 9 பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்

By

Published : Dec 18, 2022, 7:38 AM IST

ஈரோடு மாவட்டம்புஞ்சைப் புளியம்பட்டி பகுதியில் செயல்படாத நூற்பாலை வளாகத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய நூற்பாலை காவலாளி உட்பட 9 பேர் பேரை நேற்று (டிசம்பர் 17) போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் ரூ.1,02,000, ரொக்கம், 10 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நேருநகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பயிடத்துக்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செயல்படாத தனியார் நூற்பாலை வளாகத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 9 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்யதனர்.

முதல்கட்ட தகவலில் அவர்கள் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த இம்தியாஸ், தனசேகர், அமீர்ஜான், தேவராஜ், கண்ணன், கோகுல், ராஜேஷ்குமார், சசிகுமார் மற்றும் தனியார் நூற்பாலை காவலாளி பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:2 ஆண்டாக டிமிக்கி.. 25 சவரன் தங்க பிஸ்கட்டுடன் சிக்கிய நபர்!

ABOUT THE AUTHOR

...view details