திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் கருவூலக் காலனியில் வசித்து வருபவர் உத்தமராஜா; முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து விட்டார். இவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூர் பகுதியில் தோட்டம் வாங்க முடிவு செய்தார். அதற்காக நேற்று (மே 10) காலை தனது மனைவியுடன் சென்று தோட்டத்தை பார்த்துவிட்டு மாலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் வெளிப்பூட்டு மற்றும் கதவை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 75 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது.