ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கால்நடைச் சந்தையில் உழவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டுவருவது வழக்கம். புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குப்பதிவு வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டுசெல்வோரைப் பறக்கும் படையினர் பிடித்து உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.
இதனால் வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததால் பறக்கும் படை வாகன சோதனை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பணம் கொண்டுசெல்லவும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.