தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளியிடம் நகைகளை பறித்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை!

ஈரோடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளை அடித்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோட்டில் அருகே பயங்கரம் மாற்றுத்திறனாளி பெண்னிடம் நகைபறிப்பு...!
ஈரோட்டில் அருகே பயங்கரம் மாற்றுத்திறனாளி பெண்னிடம் நகைபறிப்பு...!

By

Published : May 21, 2022, 9:57 AM IST

ஈரோடு:மாவட்டம் ஆர்.என்.புதூர் மாயபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜாஸ்மின். இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சித்தோடு அடுத்த பெருமாள் மலை பகுதியை சேர்ந்த ராசு என்பவரின் மனைவி தேவி, ஜாஸ்மினின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்தார்.

இதில், கடந்த 2020, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி, தேவி வழக்கம்போல் ஜாஸ்மின் வீட்டுக்கு வேலைக்கு வந்தபோது, வீட்டில் ஜாஸ்மின் மட்டும் இருந்ததை கவனித்து, ஜாஸ்மின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஜாஸ்மினின் தலையில் தாக்கியுள்ளார். பின்னர், அவரின் தங்க நகையை கொள்ளையடித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர். மாலதி நேற்று (மே 20) தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட தேவிக்கு 5 வருட சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை திருட்டு

ABOUT THE AUTHOR

...view details