ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் தம்புரொட்டியில் இருந்து 15 பேர் டாடா சுமோவில் தோட்ட வேலைக்காக அந்தியூர் சென்றனர். அப்போது, மணியாட்சி பள்ளம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டாடா சுமோ, சாலையோரத்தில் இருந்த பாறை கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், மூவர் ஆபத்தான நிலையில் பர்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் டாடா சுமோ கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு! - 4 people died at tata sumo accident
ஈரோடு: மணியாட்சி பள்ளம் பகுதியில் டாடா சுமோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
cca
தகவலறிந்து வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் தேவராஜ்(45), சிக்கான்(42),ஜோகன்(38) தொட்டப்பி(40) என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்த 7 பேர் சேலம் மற்றும் ஈரோடு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பர்கூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.