ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே செந்தில்குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகத்திலிருந்து சேலத்துக்கு சென்ற காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
கர்நாடக குவாரி அதிபரிடம் ரூபாய் 4.66 லட்சம் பறிமுதல் - etv new
கர்நாடக குவாரி அதிபரிடம் ரூபாய் 4.66 லட்சம் பறிமுதல் உரிய ஆவணங்கள் இன்றி வந்ததாக பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதில் குவாரி அதிபர் ஹெக்டே உரிய ஆவணங்களின்றி ரூபாய் 4.66 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், ’தொழிலாளருக்கு சம்பளம் கொடுப்பதற்கு எடுத்துச் செல்வதாகக் கூறிய நிலையில் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து பவானிசாகர் தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் பறிமுதல் செய்த பணம் சத்தியமங்கலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல் 2021: பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ