ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் எக்கத்தூர் பிரிவு, ஆலமரத்து சரிவு பகுதியில் நோயால் உயிரிழந்த ஆண் யானையின் தந்தங்கள் திருடப்பட்டன. இதுகுறித்து கடம்பூர் வனத்துறையினர் விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் யானையின் தந்தத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
விசாரணையில் அத்தியூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், செங்கோட்டையன் (45), மற்றும் சடையப்பன் (40) என்றும் உயிரிழந்த யானை உடலில் ஆசிட் ஊற்றி தந்தத்தை திருடி வெளிச்சந்தையில் விற்றதும் தெரியவந்தது.