கரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், ஒரே காரில் முகச்கவசம் ஏதுமின்றி பிகார் இளைஞர்கள் 18 பேர் தமிழ்நாடு கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் நுழைய முயன்றனர். எட்டு பேர் வரக்கூடிய அக்காரில், வாகன விதிகளுக்குப் புறம்பாக 18 பேர் அமர்ந்து வந்தது மட்டுமல்லாமல், கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அலட்சியப்படுத்தியுள்ளனர்.
அறியாமையில் பயணித்த அந்தக் குழுவினரைத் தடுத்துநிறுத்திய கர்நாடக காவல் துறையினர், நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக்கூறி திருப்பியனுப்பினர்.
தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதியான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி, காரப்பள்ளம் ஆகிய இரு சோதனைச்சாவடிகளிலும் காவல் துறையினர் வாகனங்களை ஆய்வுசெய்து, பயண விவரங்களைக் கேட்டறிந்து பின்னரே அனுமதிக்கின்றனர்.