ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி அரசு கூர்நோக்கு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறுமி தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என பாதுகாவலரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி கழிவறையில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அரசு காப்பகத்தில் இருந்து சிறுமியை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.