ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் அம்மா இருசக்கர வாகனம், வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - Sengottaiyan
ஈரோடு: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
minister
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் ஆல்பாஸ் என்ற காரணத்தால், பிளஸ் 1 சேர்ந்து படிக்க அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 10ஆம் தேதி திங்கள்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
அன்றைய தினமே மாணவர் சேர்க்கை, பாடபுத்தகங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்” என்றார்.