அந்தியூரில் வாகன சோதனையில் மது பாட்டில்கள் பறிமுதல் - 100 Alcohol bottle seized
ஈரோடு: அந்தியூரில் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் 100 கட்சி துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அண்ணாமடுவு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரில் சோதனை செய்ததில், காரில் இருந்த 100 கட்சி துண்டுகளை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல அத்தாணி பகுதியில் வாகன சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை எடுத்துச் சென்ற ஜெகநாதன் என்பவரிடமிருந்து 100 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தியூர் தாசில்தார் கணேசனிடம் ஒப்படைத்தனர்.