திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேவுள்ள கீழ்மலை பகுதியில், பேத்துப்பாறை கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த செல்வத்தின் மகன் சதீஷ்குமார்( 22 ) கஞ்சா விற்பனை செய்துவருவது தெரியவந்தது.