திண்டுக்கல்: பழனி மருத்துவ நகரைச் சேர்ந்தவர், பாண்டி (65). இவரது மனைவி பாப்பாத்தி என்ற பழனியம்மாள். அடிவாரம் பகுதியில் வியாபாரம் செய்துவரும் பாண்டி, தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 10) மாலை தனது வீட்டில் இருந்து அடிவாரம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.
சாலை விபத்தில் பெண் பலி
அப்போது பழனி புறவழிச்சாலையில் உள்ள பழனி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று பாண்டியின் இருசக்கர வாகனத்தின்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டி, அவரது மனைவி பாப்பாத்தி ஆகிய இருவரையும் பொதுமக்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.