தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்; விவசாயிகள் வேதனை - latest tamil news

கொடைக்கானலில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றி கூட்டத்தை, தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் வேதனை
விவசாயிகள் வேதனை

By

Published : Feb 2, 2023, 2:13 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் மேல் மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில். இங்கு கேரட் பீன்ஸ் அவரை முட்டைக்கோஸ் வெள்ளை பூண்டு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் நல்ல மருத்துவ குணம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வராக இருக்கும் சூழலில் கொடைக்கானல் மேல் மலை மற்றும் கீழ் மலை விவசாயிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கும் வனவிலங்குகள் இருந்து வருகிறது. இதில் முக்கியமாக காட்டுப்பன்றி விவசாய நிலங்களை சேத படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாய நிலங்களுக்குள் போகும் காட்டு பன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பன்றியை விரட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விவசாயம் நிலங்களில் புகுந்து, விவசாய பயிர்களையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்கு வனத்துறை நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கொடியேற்றத்துடன் தொடங்கிய சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆண்டு பெருவிழா!

ABOUT THE AUTHOR

...view details