தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தண்ணீர் இல்லாமல் நாங்கள் எப்படி வாழ்வது?’ - கிராம மக்களின் சோகக் கதை! - தண்ணீர் தட்டுப்பாடு

திண்டுக்கல்: நந்தனார் கிராம மக்கள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் குழாய் நீரை சேமித்து வாழ வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அம்மக்களின் வலிகள் நிறைந்த வார்த்தைகளுடன் தங்களது வாழ்க்கையை கடந்து செல்கின்றனர்.

நந்தனார் கிராம மக்கள்

By

Published : May 4, 2019, 10:36 PM IST

தமிழ்நாடு முழுவதும் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்களின் நிலை மிக மோசமாகி வருகிறது. பருவகால மழையும் பொய்த்து போனதால் பூமியும் வெப்பமடைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ந்து போன நிலம், வறட்சியும், வறுமையும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நமது குழந்தைகள் பாலுக்காக ஏங்கிய காலம் மறுவி இன்று தண்ணீருக்காக அழும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நந்தனார் கிராம மக்கள் தண்ணீருக்காக காத்திருக்கும் அவல நிலை பலரையும் அதிர்ச்சியைடைய வைத்துள்ளது.

பாரதிராஜா படமான கருத்தம்மா படத்தில் காண்பிக்கப்படுவது போல் வறண்ட பூமியாக காட்சியளிக்கும் மாவட்டம் திண்டுக்கல். இம்மாவட்டத்தில், தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அதிலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நந்தனார்புரம் கிராமத்தில் நிலவும் தொடர் தண்ணீர் தட்டுப்பாட்டால் இங்குள்ள மக்கள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் குழாய் நீரை சேமித்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வேலைக்கு செல்ல வேண்டிய, ஆண் - பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு பணக்காரர்கள் இல்லை, ஏழ்மையில் வாழும் எளிமையான மக்களாவர். இது கோடை காலம் என்பதால் குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நந்தனார் கிராம மக்கள்

மேலும், தண்ணீர் வரும் நாட்களில் மணிக்கணக்கில் காத்திருந்து மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் நின்று சிறியவர், பெரியவர் என அனைவருமாக தண்ணீர் பிடிக்கும் அவல நிலையை காணுகையில் கண்களில் ரத்தக்கண்ணீரே வருகிறது. இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், 'நான்கு நாட்களுக்கு ஐந்து நாட்கள் ஒருமுறை தண்ணீர் வந்தால் எப்படி நாங்கள் வாழ்வது. குடிப்பது, சமைப்பது மட்டுமின்றி குளிப்பதற்கு, துவைப்பதற்கு என அனைத்திற்கும் நாங்கள் இந்த தண்ணீரை நம்பிதான் உள்ளோம். தண்ணீர் தட்டுப்பாட்டினால் கோடைகாலங்களில் குழந்தைகளைக் குளிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details