தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துட்டுக்கு தண்ணி...! - வேதனையில் பொங்கும் அகரம் மக்கள் - திண்டுக்கல்

திண்டுக்கல்: விலைக்கு நீர் வாங்கி பயன்படுத்தும் அவலநிலையை எடுத்துரைக்கும் வகையில் காலிக்குடங்களில் பேப்பர் ரூபாய் நோட்டுகளை ஒட்டி கிராம மக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

water crisis

By

Published : Sep 24, 2019, 3:12 PM IST

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சிக்குள்பட்ட உலகம்பட்டி பிரிவு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் சிக்கல் இருந்துவருகிறது.

தற்போது குடிநீர் மட்டுமின்றி வீட்டிற்கு அன்றாட தேவைப்படும் நீரைக்கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பேப்பர் ரூபாய் நோட்டு ஒட்டி போராட்டம்

இந்நிலையில் இது குறித்து பலமுறை அகரம் பேரூராட்சியில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கிராம மக்கள்-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து காலிக் கூடங்களில் பேப்பர் ரூபாய் நோட்டுகளை ஒட்டி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: தண்ணீர் கேட்டு ஆதார் கார்டுகளை வீசியெறிந்த மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details