தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கும் குப்பைகளை உரமாக்குவது குறித்து பயிற்சி முகாம் - மக்கும் குப்பைகளை உரமாக்குவது குறித்து பயிற்சி முகாம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மக்கும் குப்பைகளை உரமாக்குவது, காய்கறி கழிவுகள் போன்ற பொருள்களை உரமாக்குவது குறித்து செய்முறை விளக்கமளிக்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டம்
Waste management awareness

By

Published : Jan 30, 2020, 7:32 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மக்கும் குப்பைகளை உரமாக்குவது குறித்து பயிற்சி முகாம் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா தலைமை வகித்தார். தொடர்ந்து நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் எனவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

மக்கும் குப்பைகளை உரமாக்குவது குறித்து பயிற்சி

நம் அன்றாட பயன்படுத்தக்கூடிய காய்கறி கழிவுகள் போன்ற பொருள்களை உரமாக்குவது குறித்து செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானலைச் சேர்ந்த விடுதி உரிமையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் கோரைப் புல் விவசாயம்: சிறப்புத் தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details