தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

32 அடி உயர பிரமாண்ட பிள்ளையார் சிலை! - தமிழ்நாடு

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது, பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

vinayagar chanthurthi

By

Published : Sep 2, 2019, 8:46 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 விநாயகர் கோயில்களில், 32 அடி உயர பிரமாண்ட சிலை வனத்தில் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

32 அடி உயர பிரமாண்ட சிலை!

சேலம் மாவட்டத்தில் ராஜ அலங்காரத்தில், ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஐந்தடி உயர சிலை நிறுவப்பட்டு சிறப்பான பூஜைகள் நடைபெற்றது.

மேலும், கோவை மாவட்டத்தில் புளியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் 19 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட விநாயகர் சிலை ஒரே கல்லில் செய்யப்பட்ட 190 டன் எடை கொண்டது. 200 வருட பழமை வாய்ந்த கோயில் என்பதால், பக்தர்கள் காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,400 விநாயகர் சிலைகள் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details