தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியாயம் கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்! - ettayapuram

திண்டுக்கல்: எட்டயபுரம் அருகே தனியார் தார் தொழிற்சாலையில் வெளியாகும் நச்சுப்புகையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நியாயம் கோரி தேர்தலை புறக்கணிக்கும் கிராமக்கள்

By

Published : Apr 18, 2019, 7:45 AM IST

திண்டுக்கல் மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அக்கிராமத்தில் உள்ள குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள தனியார் தார் தொழிற்சாலையிலிருந்து வரும் நச்சுப்புகையால் கடந்த ஐந்து வருடங்களில் பத்துக்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளாக புகார்கள் இருந்துவந்தன.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இந்த நச்சுப் புகையால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையை மூடக்கோரி அத்தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயம் கோரி தேர்தலை புறக்கணிக்கும் கிராமக்கள்

இருப்பினும், அரசு தரப்பிலிருந்து இதுவரை தங்களது நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறி அத்தொழிற்சாலை முன்பு பந்தம் அமைத்து, கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு கட்டத்தில் இது வாக்குவாதமாக மாறியதால், மின்சாரத்தைத் துண்டித்துவிட்டுக் காவல் துறையினர் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details