திண்டுக்கலுக்கு புதிய பெண் ஆட்சியர் - புதிய பெண் ஆட்சியர்
திண்டுக்கல் : 26ஆவது மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி பதவி ஏற்றுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக வினய் பொறுப்பேற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில், அவர் அரியலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரான விஜயலட்சுமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை திண்டுக்கல் மாவட்டத்தின் 26ஆவது மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர், காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டு, குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.