நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணி சார்பாக விஜய் பிறந்தநாளின் வாழ்த்து போஸ்டர்கள் நகர்ப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
'சிரிச்சா எமன்டா' - விஜய்யின் பிறந்தநாள் போஸ்டரால் சலசலப்பு - DINDUGAL news
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் நகர்ப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள விஜய்யின் பிறந்தநாள் விழா வாழ்த்து போஸ்டர் பெரும் சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த போஸ்டர்களால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. போஸ்டரில் ”சிரிச்சா எமன்டா” என்ற இரு வார்த்தைகளின் முதல் எழுத்துகளான ’சி’, ’எம்’ (CM) ஆகிய எழுத்துக்கள் மட்டும் ஆங்கிலத்திலும் மற்ற எழுத்துக்கள் தமிழிலும் இடம்பெற்றுள்ளன.
இதை வைத்துப் பார்க்கும்போது வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு நடிகர் விஜய் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்பது போன்ற கற்பனையில்தான் ரசிகர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்தப் போஸ்டரால் அங்கிருக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் சலப்பை ஏற்படுத்தியுள்ளது.