தமிழ்நாடு

tamil nadu

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ - பொதுமக்கள் பெரும் அவதி

கோவை: வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

By

Published : Feb 28, 2020, 3:20 PM IST

Published : Feb 28, 2020, 3:20 PM IST

vellalur-fire
vellalur-fire

கோவை மாவட்டம், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் வெயிலின் தாக்கத்தினாலும், காற்று அதிகம் வீசியதாலும் அங்கு தீ பற்றியது. இதனால் வெள்ளலூர் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வேகமாக பரவிய தீயை அங்குள்ளவர்கள் பெரும் சிரமத்திற்குப் பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஏற்கெனவே, அந்தப் பகுதிகளில் குப்பைகள் அதிகம் கொட்டுவதால் அப்பகுதி மக்கள் உடல்நிலை கோளாறுகள் ஏற்படுவதாக கூறியிருந்த நிலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தானது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ

மேலும், அப்பகுதி மக்கள் வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே இதுபோன்ற தீ வேகமாக பரவுகிறது என்றும்; வெயில் காலம் ஆரம்பித்து விட்டால் மக்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் முருகபவனம் என்னும் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் தீ பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், மாநகராட்சி தண்ணீர் லாரி உதவியுடன் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ அருகிலுள்ள வேறு பகுதிகளுக்குப் பரவ விடாமல் தடுப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். திடீர் தீயினால் இப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ

இதையும் படிங்க: மதுரையில் ஒரே நாளில் 594 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details