திண்டுக்கல் தோமையார்புரத்தைச் சேர்ந்த பிரசாந்த், மாரிமுத்து ஆகிய இருவரும் திருச்சி, காரைக்குடி பகுதிகளிலிருந்து பக்ரீத் பண்டிகை விற்பனைக்காக மாடுகளை ஏற்றிக்கொண்டு லாரியில் திண்டுக்கல்லுக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் புதுக்கோட்டை அருகே வந்தபோது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவர்களைத் திடீரென தாக்கினர். அதன்பின் வாகனத்திலிருந்த மாடுகளையும் அவர்கள் கைப்பற்றினர்.
பக்ரீத்துக்காக மாடுகளை ஏற்றி வந்தவர்கள் மீது தாக்குதல்! - திண்டுக்கல்
திண்டுக்கல்: பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்திற்காகப் புதுக்கோட்டை வழியாக மாடுகளை ஏற்றி வந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்
பக்ரீத்
இந்த தகவல் அறிந்த SDPI கட்சியினரும், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் திண்டுக்கல்-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.