தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2020, 11:44 PM IST

ETV Bharat / state

கரோனா வைரஸ் அறிகுறியுடன் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல்: கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் காணப்பட்ட இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

two persons admitted in Dindigul GH with corona symptoms
two persons admitted in Dindigul GH with corona symptoms

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் கடமனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் கேரளா மாநிலம் பாலக்காட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை ஊர் திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சுந்தரபாண்டிக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் கரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்ய போதிய ஆய்வக வசதிகள் இல்லை எனக் கூறி அவரை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதன் பின்னர் தேனி மருத்துவர்கள் அவரை திண்டுக்கல் அரசுத் தலைமை மருத்துவமனைக்குப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அங்கு சுந்தரபாண்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கொடைக்கானல் நகர் லாய்ட்ஸ் ரோட்டை சேர்ந்த ரவி ராமமூர்த்தி (65) என்பவர் சென்னையில் தங்கி இருக்கிறார். மருத்துவரான இவர் கடந்த சில நாள்களாக இலங்கை, மலேசியா நாடுகளுக்குச் சென்றுவிட்டு கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்க வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகள் இருப்பதாக நகராட்சி சுகாதார அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சுப்பையா, அரசு மருத்துவர் ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில் சுகாதார ஊழியர்கள் ரவி ராமமூர்த்தி தங்கியிருந்த வீட்டைச் சோதனை செய்தனர்.

கரோனா வைரஸ் அறிகுறியுடன் காணப்பட்ட இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி

அப்போது அவருக்குக் கடுமையான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே நாளில் இருவர் கரோனா அறிகுறிகளுடன் திண்டுக்கல் மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...கரோனா பயத்தால் வயதான தம்பதியை வீட்டில் பூட்டிய அக்கம்பக்கத்தினர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details