தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோவில் மதுபானம் கடத்தல் - இருவர் கைது! - மதுபானங்கள் கடத்திய இளைஞர்கள்

திண்டுக்கல்: ஆட்டோவில் வெளிமாநில மதுபானங்களை கடத்திய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆட்டோவில் மதுபானம் கடத்தல்
ஆட்டோவில் மதுபானம் கடத்தல்

By

Published : Jun 12, 2021, 2:12 AM IST

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் வெளிமாநில மதுபானங்கள் இருப்பது தெரியவந்தன.

இதனையடுத்து மதுரை, சாத்தான்குடி ஊரைச் சேர்ந்த மாரியப்பன் ( 31), கார்த்திக் (27) ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக திண்டுக்கல் வந்து, திண்டுக்கல்லில் இருந்து ஆட்டோ மூலமாக 15 லிட்டர் மதுபானங்களை விற்பனைக்காக சாத்தான்குடி கொண்டு செல்வதாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:காய்கறி லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details