திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து அவ்வப்போது மிதமான மழையும், திடீரென கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான, செம்பரான் குளம், கருவேலம்பட்டி, பட்டியக்காடு உள்ளிட்ட பல்வேறு மலை கிராம மக்கள் அமைந்துள்ளது.
இங்கு பெய்த கனமழையால் மலை கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இந்த கிராம பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செம்பரான் குளம் மலை கிராமத்தில் உள்ள மக்கள் நேற்று(டிசம்பர் 7) காலை வழக்கம்போல் அந்த பகுதிகளில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்று உள்ளனர்.
இவர்கள் காலையில் வேலைக்கு செல்லும்போது மழை இல்லாமல் இருந்தது. வேலை முடிந்து மாலை திரும்பிய போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கயிறுகளை கட்டி மீட்டுள்ளனர். பாச்சலூர் பகுதியிலிருந்து செம்பரான் குளம் மலை கிராமத்திற்கு செல்லக்கூடிய பகுதியில் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.