தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை
சுற்றுலா பயணிகள் வருகை

By

Published : Nov 27, 2022, 12:59 PM IST

திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் இன்று (நவ. 27) ஞாயிற்றுக்கிழமை என்பதால், கொடைக்கானலுக்கு தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

கேரளாவில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள சுற்றுலா பணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் வருகை

பிரதான சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மர காடுகள், குணா குகை, நட்சத்திர ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

வெயில், பனிமூட்டம் என மாறி மாறி காலநிலை இருந்து வருவதால் அதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details