திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தேயாக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
10 சதவீத இட ஒதுக்கீடு:
10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "மத்திய அரசு வழங்கி உள்ள 10 இட ஓதுக்கீடு உத்தரவு என்பது மாபெரும் சமூக அநீதியாகும். சமமான சமூகம் என்பது பொருளதாரத்தால் நிர்ணாயிக்க முடியாது. ஏனெனில் 2000 ஆண்டுகளாக தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என சமூகத்தால் ஒடுக்கப்படும் மக்களின் சாதி இழிவுப் பட்டம் எந்த காலத்திலும் போகாது, இன்றளவும் அவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டும் இழிவாக நடத்தப்பட்டும்தான் வருகிறார்கள். அவர்கள் சமுக நீதி, கல்வி பெறுவதற்குதான் நம் முன்னோர்கள் இடஒதுக்கீட்டு உறிமையை போராடி பெற்றுத் தந்தார்கள். இந்திய நாட்டின் உயரிய பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்நிலையில் உயர்வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது என்பது மாபெரும் துரோகம்" என்று தெரிவித்தார்.