தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"காதில் பூ சுற்றி" ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி...

திண்டுக்கல்: பொதுமக்களுக்கு பூ சுற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளி ஒருவர் தனது காதில் பூ சுற்றி விநோதமாக மாவட்ட ஆட்சியரிடன் மனு அளித்தார்.

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்

By

Published : Jul 30, 2019, 12:44 AM IST

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களது குறைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளிப்பர்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், கணேஷ் பாபு என்ற மாற்றுத்திறனாளி மனு அளித்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களின் கூறியதாவது,

தாண்டிக்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துத்தர வலியுறுத்தி இதுவரை 275 மனுக்களுக்கு மேலாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன். தாண்டிக்குடி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், திண்டுக்கலில் இருந்து தாண்டிக்குடிக்கு பேருந்து வசதி செய்துகோரியும் மனுவில் குறிப்பிட்டேன். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

மேலும், பொதுமக்களுக்கு பூ சுற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது காதில் பூ சுற்றி ஆட்சியரிடம் மனு அளித்தேன் என்று கணேஷ் பாபு கூறினார்.

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details