திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் வழிபடும் நரசிங்க பெருமாள் கோயில் மாலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு சாதி பெயரை கூறி கோயிலுனுள் நுழைய அனுமதிக்க மறுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயிலுக்குள் அனுமதி மறுப்பு; மக்கள் போராட்டம்! - கோவில்
திண்டுக்கல்: சாதி பெயரை கூறி கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவிலுக்குள் அனுமதி மறுப்பு; மக்கள் போராட்டம்
இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், "இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளாக எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வழிபடப்படுகிறது. இது பட்டியலினத்தவர் சமூகத்தினரால் உருவான கோயில். ஆனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக நிர்வாகிகள் எங்களின் சாதி பெயரை வெளிப்படையாக கூறி உங்களுக்கு எதற்கு சாமி என்று கேட்கிறார்கள். எங்கள் சமூகத்தை சார்ந்த தற்காலிக நிர்வாகிகள் இருவர் நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் எங்கள் மீதான ஒடுக்குமுறை குறையும்" என்றனர்.