தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்தியாவிற்கு அதிபர் தேர்தல்முறை அறிவிக்கப்படலாம் - கார்த்தி சிதம்பரம் - திண்டுக்கல்

திண்டுக்கல்:  இந்தியாவிற்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கார்த்திக் சிதம்பரம் அளித்த பேட்டி

By

Published : Aug 13, 2019, 6:18 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தரிசனம் செய்ய வந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், பாஜகவிற்கு பல மாநில கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவை அளித்து வருகிறது. இதனால், பாஜக தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுக்கிறது. இவர்களின் சர்வாதிகாரப் போக்கை கண்டிக்கும், ஒரே கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருந்து வருகிறது.

செய்தியாளர்களை சந்திக்கும் கார்த்தி சிதம்பரம்
மோடியின் சர்வாதிகாரத்திற்கான எடுத்துக்காட்டு தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பாண்டிச்சேரி, டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், முழு மாநிலமாகவே செயல்பட்டு வந்த காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது பெரும் தவறு.
மோடி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அதிகாரத்தை ஒற்றை புள்ளிக்கு கீழே வரும் வகையில் கட்டமைக்கிறார். இதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முழு அதிகாரமும் செல்லும் நிலை ஏற்பட்டு மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படும். இனி வரும் காலங்களில் பாஜக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி, அதிபர் தேர்தல் முறையை நடைமுறை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details