தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்பனை - மூவர் கைது - கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்பனை

திண்டுக்கல்: கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த மூவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள் கைது
கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள் கைது

By

Published : Jan 31, 2020, 12:48 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கலையரங்கம் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் லாட்டரி சீட்டுக்கள், டோக்கன்கள் விற்பனை செய்துவந்த மூவரை கைது செய்தனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர்கள் ஆனந்தகிரி ஒன்றாவது தெருவைச் சேர்ந்த அபுதாஹீர்(50), பாக்கியபுரத்தைச் சேர்ந்த நாகூர் கனி (40), நாயுடுபுரத்தைச் சேர்ந்த ராஜா (45) என்பது தெரியவந்தது.

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள் கைது

மேலும், அவர்களிடமிருந்து 66 லாட்டரி சீட்டுகள், டோக்கன்கள், 4,500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீடு, கடைகளில் போலீசார் திடீர் சோதனை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details