திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மட்டும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கொடைக்கானல் அருகே அக்கரைக்காடு பகுதியில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டன் தினகரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.