திண்டுக்கல்:வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுத்துப்பட்டி கிராமத்தில் தனலட்சுமி, முத்து, கிருத்திக் ஆகிய மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் அந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு விளையாடச் சென்றுள்ளனர். அந்தத் தோட்டத்தின் அருகே இருந்த கண்மாய் தண்ணீரில் 5 பேரும் இறங்கி விளையாடினர். அப்போது முத்து, தனலட்சுமி, கிருத்திக் மூவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கி மாயமாகினர்.
திண்டுக்கல்லில் 3 குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு - தோட்டத்தின் அருகே இருந்த கண்மாய்
வத்தலக்குண்டு அருகே தோட்டத்திற்கு விளையாட சென்ற மூன்று குழந்தைகள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
three-children-who-went-to-play-in-the-garden-drowned-in-the-tragedy
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற இரண்டு சிறார்கள் கிராமத்துக்குள் சென்று ஊர் மக்களிடம் தெரிவித்தனர். அதன்பின் 3 குழந்தைகளின் உடலும் மீட்க்கப்பட்டது. இந்த உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு