திண்டுக்கல்:மலைக்கோட்டையில் மரம் வளர்க்கும் திட்டத்தில் 50 லட்சம் ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “திண்டுக்கல் மலைக்கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலை, நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது வனத்துறை அலுவலர்கள் மூலம் 5ஆயிரம் மரக்கன்றுகளில் சுமார் ஆயிரத்து 250 மரக்கன்றுகள் மலையின் மேல் பகுதியிலும், மீதம் உள்ளவை மலையில் கீழ் பகுதியிலும் நடவு செய்யப்பட்டன.
2019ஆம் ஆண்டு வீசிய கஜா புயல் மற்றும் 2019ஆம் ஆண்டில் மலையில் ஏற்பட்ட தீ விபத்தினாலும் மரக்கன்றுகள் சேதமடைந்தன. அவை போக மீதமுள்ள மரக்கன்றுகள் அங்கு உள்ளன. வனத்துறை மூலம் கணக்கு எடுக்கப்பட்டு செலவு செய்தது போக மீதம் உள்ள நிதியின் தொகையை வனத்துறை அதிகாரிகள் மூலம் அரசுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டது.