திண்டுக்கல்: நத்தம் அருகே வத்திபட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா (26), தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை நத்தம் - மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தனது நண்பர் பழனிக்குமார் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.
CCTV: பைக்கை அலேக்காக தூக்கிச் சென்ற திருடர்கள் - திண்டுக்கல் க்ரைம் செய்திகள்
நத்தத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் மர்மநபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் திருடிச் சென்ற மர்ம நபர்கள் அருகில் உள்ள மைதானத்தில் வண்டியின் லாக்கை உடைத்து எடுத்துச் செல்லும் வீடியோவும் பதிவாகி உள்ளது. இதுகுறித்து நத்தம் காவல்நிலையத்தில் அழகுராஜா புகார் செய்ததன் பேரில் நத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் கார் திருட்டு: போலீசார் விசாரணை