தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரை பார்க்க செல்போன் டவரில் ஏறிய இளைஞர் - போலீஸ் பேச்சுவார்த்தை - செல்போன் டவரில் ஏறிய இளைஞர்

திண்டுக்கல் வரும் முதலமைச்சரைக் காண்பதற்காக சுமார் 80 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறிய இளைஞரிடம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.

செல்போன் டவரில் ஏறிய இளைஞர்
செல்போன் டவரில் ஏறிய இளைஞர்

By

Published : Apr 30, 2022, 4:26 PM IST

திண்டுக்கல்:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நேற்று (ஏப்.29) தேனி சென்றார். பின்னர் இன்று (ஏப்.30) காலை தேனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி விட்டு அங்கிருந்து திண்டுக்கல்லுக்குச் சென்றார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையான பரசுராமபுரம் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பல்வேறு இடங்களில் திமுக கட்சியினர் முதலமைச்சரை வரவேற்க வெயிலில் காத்திருக்கின்றனர்.

செல்போன் டவரில் ஏறிய இளைஞர்

இதில், விராலிபட்டி பகுதியைச் சேர்ந்த குருசங்கர் என்ற இளைஞர் 80 அடி உயரம் உள்ள செல்போன் டவர் மீது ஏறி முதலமைச்சரை பார்ப்பதற்காக நின்றுள்ளார். இதனைக் கண்ட காவல் துறையினர் அவரை கீழே இறங்கி வருமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு அவர் செவிசாய்க்காத நிலையில் காவல் துறையினர் தொடர்ந்து அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் கீழே இறங்கி வருமாறு அப்பகுதி மக்களும் கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தாயுடன் கூட்டு சேர்ந்து மகளுக்கு பாலியல் வன்கொடுமை; மைனர் மகளுக்கு ஆண் குழந்தை

ABOUT THE AUTHOR

...view details