திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரில் வசித்துவருபவர் மருதுசாமி (65). இவர் புஸ்பகைங்கர்ய சபா நிர்வாகியாக இருந்துவருகிறார். மருதுசாமி தனது மனைவியுடன் மருத்துவச் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தபோது கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து, உடனடியாக பழனி நகர காவல் துறையினருக்கும் மருதுசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்திராநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இரண்டு தினங்களுக்கு முன்பு பழனியில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்த வழக்கில், காவல் துறையினர் கொள்ளையர்களைத் தேடிவரும் நிலையில் மீண்டும் பழனி நகரில் அதேபோன்ற மற்றொரு திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது மேலும் பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது.
பழனியில் மீண்டும் கைவரிசைக் காட்டிய கொள்ளையர்கள் பொதுமக்கள் நீண்டநாள்கள் வெளியூரில் சென்று தங்க வேண்டிய சூழல் ஏற்படும்போது வீட்டில் விலையுயர்ந்த பொருள்களை வைத்துவிட்டுச் செல்ல வேண்டாம் எனவும், அடிக்கடி வெளியூர் செல்லும் நபர்கள் வீட்டின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் பழனி நகர காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்