திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பள்ளங்கி மலைக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றியம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராம நூலகம் தொடங்கப்பட்டது. ஆனால், நூலகம் தொடங்கிய சில காலத்திலேயே நூலகத்திற்குப் பணியாளர்கள் யாரும் வாராததால் நூலகம் சுற்றிலும் புதர்கள் மண்டி பயன்பாடற்று இருந்தது.
புதர் மண்டி கிடக்கும் நூலகம்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை - latest dindugal news
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பள்ளங்கியில் நீண்ட நாள்களாக மூடி கிடக்கும் கிராம நூலகத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள், இளைஞர்கள் பள்ளி, கல்லூரியில் பயின்றுவருகின்றனர். நூலகம் மூடியிருப்பதால், மாணவர்கள் தங்கள் பாடம் தொடர்பான நூல்களைப் படிக்க அங்கு சென்று புத்தகம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்திற்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நூலகத்தை திறக்கவும் அங்கு நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும் அக்கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிதிலமடைந்துவரும் திருவாரூர் அரசு நூலகம் - காப்பாற்றுமா தமிழ்நாடு அரசு?