தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டன்சத்திரத்தில் கோயில் திருவிழா: தேவராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், எம்.பி! - ஒட்டன்சத்திரத்தில் கோயில் திருவிழா

ஒட்டன்சத்திரம் அருகே கோயில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினர்.

தேவராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், எம்.பி
தேவராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், எம்.பி

By

Published : Jun 2, 2022, 1:08 PM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது பெயில் நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில். இந்தக் கோயில் திருவிழா ஆனது வருடா வருடம் நடைபெறும். இந்தக் கோயிலை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி இந்தக் கோயில் திருவிழாவை சுமார் ஏழு தினங்களுக்கு சிறப்பாக நடத்துவது வழக்கம்.

கோயில் திருவிழாவில் மூன்றாவது தினமான நேற்று (ஜுன் 1) இரவு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

தேவராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், எம்.பி

அப்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தேவராட்டம் ஆடிக்கொண்டிருந்த போது, இவர்களும் இணைந்து உற்சாகமாக கோயில் முன்பு தேவராட்டம் ஆடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

இதையும் படிங்க:திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: ஜி.கே.வாசன்

ABOUT THE AUTHOR

...view details